header image
1
Digg me

தமிழர்களுக்கு வணக்கம்.

கடந்த சில மாதங்களா ஒரு தமிழ் மென்பொருளில் கவனத்தை செலுத்தினோம்.

அது எழுத்தாணி என்ற புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள். இப்பொது இதனை பீட்டாவில் வெளியிடுகிறோம். பயன்படுத்திப்பாருங்கள். எதேனும் குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

எழுத்தாணியை கீழ் இறக்க
http://api.ulagam.net/download/ezhuthaani.exe

உயிர் எழுத்துக்கள்

a A i I u U R e E Y o O V M H
அஂ ஆஃ

மெய்யெழுத்துக்கள்

ka/ga Za/Ga
ca ja za
ta/da Na
tha/dha na
pa/ba ma M
ya ra Ra la La Qa va sa ha H xa Xa qa
க்ஷ

குறிப்பு: “au” -> “V” and “ai”/”ae”  -> “Y”.

எடுத்தக்காட்டு:

அறம் செய விரும்பு
aRam ceya virumpu

குறிப்பு: இது முதல் பதிப்பு.  கோளாறுகள் இருக்கும்.

under: பகுக்கப்படாதது
Tags: , ,

தமிழ் சொல் திருத்தி பதிப்பு 2

Posted by: உலகம்.net குழு | ஜூன்19, 2009 | 6 Comments |
1
Digg me

தமிழ் சொல் திருத்தியின் அடுத்த கட்ட முயற்சியாக மேலும் ஐம்பது ஆயிரம் வார்த்தைகளை இணைத்து புதிய பதிப்பை வெளியிட்டுள்ளோம். இதனை மொசில்லா தளத்தில் இருந்து கீழ் இறக்கலாம்.  இந்த புதிய சொற்களை தமிழ் விக்கிப்பீடியாவில் விக்சனரியிர் இருந்து பெறப்பட்டது. இந்த திட்டத்தின் பக்கத்தினை காணவும். சுந்தர்,  ரவிசங்கர் மற்றும் இதர விக்கி வல்லுனர்கள் தந்த ஆதரவினால் இதனை வெளியிட முடிந்துள்ளது.

உதவி/துணை
உங்களுடைய பிரச்சனைகள், குற்றசாட்டுகள், குறைபாடுகள், அம்சங்கள், கேள்விகள் போன்ற வற்றை நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்

தொடுப்புகள்
கீழிறக்க http://code.google.com/p/tamilspellchecker/
கருத்தாடல் மன்றம் http://ulagam.net/forum/forum.php?id=5
விக்சனரி தானியங்கித்திட்டம் http://ta.wikipedia.org/wiki/பயனர்:Sundar/விக்சனரி_தானியங்கித்திட்டம்

உங்களிடம் தமிழ்சொற்பட்டியல் இருந்தால் இத்திட்டத்திற்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்

under: பகுக்கப்படாதது

தமிழ் வானொலி விட்ஜெட்

Posted by: உலகம்.net குழு | ஜூன்13, 2009 | 4 Comments |
1
Digg me

நண்பர்களே!

நெடுநாட்களுக்குப்பிறகு புதிய சேவையுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வானொலி பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இப்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நிறைய பன்பலைகள், சாதாரண அலைவரிசைகள் எனப்பல வானொலிகள் தங்களது சேவைகளை அளிக்கின்றன.  இது ஒருபக்கம் இருக்க,  இணையத்திலும் நாம் பற்பல வானொலி சேவைகளை கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிரோம்.

அவைகளை ஒன்று திரட்டி உங்களுக்கு விட்ஜெட்டாக கொடுப்பதில் மகிழ்கிறோம். இதனை உருவாக்க்க தூண்டிய வெங்கடேஷின் திரட்டி ரேடியோவிற்க்கு எனது நன்றிகள். கீழ்கண்டவாரு வானொலி விட்ஜெட் இருக்கும்.

வானொலி விட்ஜெட்

வானொலி விட்ஜெட்

இதனை உங்களது வலைப்பதிவில் பொருத்திக்கொள்ள கீழே உள்ள கோடுகளை நகலெடுத்து வார்ப்புருவில் பொருத்திக்கொள்ளுங்கள்.

<iframe src="http://api.ulagam.net/vaanoli.php" frameborder="0" width="340px"></iframe>

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் வானொலி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

under: பகுக்கப்படாதது
Tags: , , , ,

பொங்கலோ பொங்கல்

Posted by: உலகம்.net குழு | ஜனவரி14, 2009 | No Comment |
0
Digg me

அனைவருக்கும் உலகம்.netன் இதயம் கனிந்த இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள். இந்திருநாள் முதல், உங்களது வீட்டில் அனைத்து செல்வங்களும் பொங்கட்டும்.

பொங்கலோ பொங்கல்!!!

pongal

- உலகம்.net

under: பொது
Tags: , ,

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Posted by: உலகம்.net குழு | ஜனவரி1, 2009 | 2 Comments |
0
Digg me

அனைவருக்கும் உலகம்.netன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் உங்களது வீட்டில் அனைத்துச் செல்வங்களும் பெற்று நலமாக வாழ எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

under: பொது
Tags: ,

உலகம்.netன் சமூகக்கூடம்

Posted by: உலகம்.net குழு | டிசம்பர்30, 2008 | 2 Comments |
0
Digg me

இதுவரையில் உலகம்.net ஒரு வலைப்பதிவுச்சேவையாக தான் இருந்து வந்தது. இனிமேல், அது ஒரு சமூகக்கூடமாக மாறியுள்ளது. இணையத்தில் தற்பொழுது பிரபலமாகியிருக்கும் social networking எனப்படும் சமூககூடம் வசதியை உலகம்.netல் காணலாம். 

இது பட்டிபிரெஸ் என்ற மென்பொருலினை வைத்து நிருவப்பட்டுள்ளது. அப்படியென்றால் இனிமேல், நீங்கள் உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவினை உலகம்.netல் உருவாக்குவது மட்டுமல்லாமல், உங்களது சக நண்பர்களையும் இதில் இணைத்துக்கொண்டு கருத்துக்களை பரிமாறலாம். 

இதில் குழுமங்கள், நண்பர்கள், வலைப்பதிவுகள் எனப்பல வசதிகள் உள்ளன. தேடும் வசதிகளும் உள்ளது. இதனை பயன்படுத்துங்கள். எதேனும் பிரச்சனை இருந்தால் admin at ulagam dot net மின்னஞ்சல் அனுப்புங்கள்.

- உலகம்.net

under: பொது
Tags: , ,

தமிழ் சொல் விட்ஜெட் – இன்று முதல்

Posted by: உலகம்.net குழு | டிசம்பர்26, 2008 | 3 Comments |
1
Digg me

நண்பர்களே!

நாம் அனைவரும் தமிழை விட அதிகமாக ஆங்கிலத்தில் படிக்கின்றோம். ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் தமிழில் மொழி பெயர்த்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் எதுவென்று நாம் அறிவது இல்லை. வலைப்பதிவர்கள் கூட சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி விடுகின்றனர். அது அப்படியே நடைமுறைக்கு வந்து விடுகிறது. இதனால் தூய தமிழை மறந்து விடுகிறோம். அதனை தவிர்க்க ஒரு புதிய முயற்சியாக ஒரு விட்ஜெட்டை செய்து நிருவியுள்ளோம்.

தமிழ் சொல் விட்ஜெட் என்பது தான் அது. இதனை நிங்கள் உங்களது வலைத்தளத்தில் பொருத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை உங்களது பக்கம் கீழ் இறக்கும்போது, இது புதிய ஆங்கில சொல்லையும், அதற்கு இணையான தமிழ் சொல்லையும் காட்டும். இதன் மூலம் நீங்களும் உங்களது வாசகர்களும் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் சொற்களை கற்கலாம்.

இந்த முயற்சிக்காக ஆங்கிலம்-தமிழ் சொற்களை கொடுத்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
1. அக்னி சிறகு – கணினி குழுமம்
2. ரவி சங்கர்
3. பெர்மி சாப்ட்

எங்களிடம் உள்ள சொற்பட்டியலின் எண்ணிக்கை 464 மட்டுமே. நீங்கள் உங்களிடம் உள்ள ஆங்கிலம்-தமிழ் அகராதியை வைத்திருந்தால் அதனை பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் சொல் விட்ஜெட்டை உங்களது வலைப்பதிவில் பொருத்திக்கொள்ள கீழே உள்ள கோடுகளை நகலெடுத்து வார்ப்புருவில் பொருத்திக்கொள்ளுங்கள்.
<script language="javascript" src="http://api.ulagam.net/tamilword.php?format=js"></script>

எதேனும் தவறுகள்/குறைகள்/கருத்துக்கள் இருந்தால் admin AT ulagam DOT netக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். தமிழ் நாட்காட்டி விட்ஜெட் பற்றிய கேள்விகள்/பிரச்சனைகளை விவாதிக்க, சேவைகள் மன்றத்திற்கு செல்லவும்

under: பொது
Tags: , , ,
0
Digg me

ஆங்கிலம், கன்னடம், பிரென்ச், ஹிந்தி, தெலுங்கு, மளையாளம் போன்ற மொழிகளில் இருக்கும் வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை சேர்த்திடுங்கள். இதனால் நாம் நன்கு பயன் அடையலாம். பிறமொழி சொல்லையும் நாம் கற்கலாம். பிறமொழி சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தையையும் கற்றுக்கொள்ளலாம்.

கீழ் கண்ட தொடுப்புக்கு சென்று வார்த்தைளை சேர்த்திடுங்கள்.
http://spreadsheets.google.com/viewform?key=pt1CS7NXZ7FX94F7C9xagRA

வார்த்தைகள் ஆயிர கணக்கில் சேர்ந்த பின்னர், வார்த்தைகளின் பட்டிலை வெளியிடுகிறோம். இதனால் அனைவரும் பயனடைவீர்.

தாங்கள் ஏற்கனவே ஆங்கிலம் – தமிழ் அகராதி வைத்திருந்தால்,  அதனை தந்து இந்த திட்டத்திற்கு உதவுங்கள். இதன் மூலம் கிடைக்கும் சொற்பட்டியல் தமிழ் சொல் திருத்தி திட்டத்தில் இடம் பெரும்.

- உலகம்.net

under: பொது
Tags: , , ,
0
Digg me

Project தமிழ் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் விட்ஜெட்கள், தமிழ் மென்பொருள்கள், மொழியாக்கங்கள் போன்றவற்றை வெளியிட விரும்புகிறோம். உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

வெளியிடப்பட்ட திட்டங்கள்

விட்ஜெட்கள்

உங்களுடைய திட்டங்கள் இதில் ஒருங்கிணைக்க

admin AT ulagam DOT net என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

நீங்கள் எவ்வாறு பங்களிப்பது

  • PHP கோடுகளை இறக்கி உங்களது கணினியில் நிறுவி பயன்படுத்திப்பாருங்கள். அதில் உள்ள வழுக்களை தெரிவியுங்கள்.
  • நீங்கள் அதனை மாற்றி இன்னும் பல சிறப்புகள் செய்ய விரும்பினால், கோடின் patch எடுத்து அனுப்புங்கள்.

இதனால் என்ன லாபம் எனக்கு

  • இதுவும் ஒரு தமிழ் தொண்டுதான்
  • உங்களது பெயர் அந்தந்த திட்டத்தின் பங்களிப்பாளர்களின் பட்யலில் இடம்பெரும்.

திட்டத்தின் தொடுப்பு

http://code.google.com/p/tamil/

இது பற்றிய உங்களின் கருத்துக்களை அனுப்புங்கள்.

under: பொது
Tags: , , ,

தமிழ் நாட்காட்டி சரியாக தெரியவில்லையா?

Posted by: உலகம்.net குழு | டிசம்பர்12, 2008 | No Comment |
1
Digg me

தமிழ் நாட்காட்டியில் சில பிரச்சனைகள் இருந்தன. அதனை சரி செய்து, இன்று புதிதாக நிறுவியுள்ளோம். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தானாக உங்களுக்கு மாறிவிடும். <script> கோடினை பயன்படுத்துவோர்களுக்கு நாட்காட்டி சரியாக தெரிய வில்லையெனில் நீங்கள் <iframe> கோடினை பயன்படுத்தலாம்.
<iframe src="http://api.ulagam.net/calendar.php" frameborder="0" width="200px" height="250px"></iframe>

நன்றி.

under: பொது
Tags: ,

Older Posts »

Categories