header image

தமிழ் மற்றும் தமிழர்களை நம்பி இணையத்தில் எதாவது செய்ய இயலுமா?

Posted by: உலகம்.net குழு | டிசம்பர்5, 2008 | 3 Comments |
0
Digg me

உலகம்.net ஆரம்பித்து நெடுநாட்கள் ஆயிற்று. ஆனால் அதனை பயன்படுத்துவோர் மிக மிக குறைவு. இன்னும் சொல்ல போனால், யாரும் பயன்படுத்துவது கிடையாது. தமிழில் எதாவது ஒரு சேவைகயை இணையத்தில் செய்ய வேண்டும் என்று என்னி உலகம்.netஐ நிறுவினேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

மனம் விட்டு கேட்கிறேன். உலகம்.net இடமிருந்து என்ன மாதிரி இணைய தமிழ் சேவையை எதிரிபார்க்கிறீர்கள்?  எப்படி இருந்தால் உலகம்.net சேவைகளை பயன்படுத்துவீர்? யோசனை கூறுங்கள். தமிழ் சார்ந்த இணைய சேவைகளை ஆதரிப்பீர். என்னை போன்றோர்களை ஊக்க படுத்துங்கள். உலகம்.net சேவைகள், இணையத்தில் ஒரு தமிழ் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது தவறா?  இல்லை, மற்றவர்கள் போல் நடிகர், நடிகையின் படங்கள் காண்பித்தல், புதிய திரைப்படத்தின் விழிகள் காட்டுவது, இலவசமாக இடம் தருவது என்று பல பல சமுக சேவைகள் தான் இணையத்தில் தமிழர்கள் விரும்புகிறார்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் மிகுந்த மன வருத்தத்துடன் இந்த பதிவினை எழுதுகிறேன். யார் மனதையும் புண்படுத்ததும்  நோக்கத்துடன் எழுதவில்லை. பணம் கொடுத்தால் தான் உலகம்.netஐ பயன்படுத்துவீர்களா? அந்த அளவுக்கு என்னிடம் பணம் கிடையாது. இணையத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் எது செய்தாலும் அவற்றை வரவேற்கப்படுகின்றன. என்னை போல் இருப்பவர்களை வரவேற்பார்களா?

பதில் சொல்லுங்கள்!

- உலகம்.net

under: பொது
Tags: , , , ,

Responses -

Hi, now am n my office pc wr i don ve tamizh keyman, so am to write in english now. I ve one suggestion. Why can u allow ppl to use their own available blog pages to get in to ulagam.net. if u want everyone to build a new blog, then its difficult fr ppl to ve one more etc… hope u understand.

and also the widget plan is good. according to me, i would ve been very much happy if that date widget has thamiz months and dates together, that makes some difference, not only u write December in tamizh…

and somewhere i read somebody is creating a package r tool r whatever for writting correct thamiz. its like the one which is available normally in ms-word for english n other languages. hope u understand. it will automatically give you options if you write some thing wrong… may b u can pull them in and make some page wr others can contribute some words.

there r many more to be done… don get down so soon… i hope ulagam.net ll come to a better shape.

நான் பார்த்தவரை பலர், கவர்ச்சிப் படங்களை போட்டு இருந்தால் தான் அந்த தளத்தையே பார்க்கிறார்கள். நான் முற்றுமுழுதாக எம்மின மக்களின் நிகழ்வுகளை பற்றியும் எம் மக்கள் படும் பாடுகளைபற்றியும் தான் எழுத நினைத்தேன். வெளிப்படையாக பேசமுடியாத காரணத்தால் (எழுத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டதால்) இன்னொருவரின் ஆக்கங்களையே பதிவு இடுகிறேன். என் சொந்த கருத்துகளையும் சில பதிவுகளில் இடுகிறேன்(என்ன நடந்தாலும் பார்க்கலாம் என்று எண்ணும்போதெல்லாம்). இப்போதுகூட ஒரு விடயத்தை பற்றி எழுத தயங்குகிறேன் (அகதிகளாகி இந்தியாவுக்கு வரும் எம் மக்கள் படும் துன்பங்களை பற்றி(௦இங்கே அகதியாக பதிவதற்கு ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கையூட்டு வாங்குவதை பற்றியும்)).

உங்கள் தளத்தில் நிறைய நல்ல விடயங்கள் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிப்பேன்.திருக்குறள் விட்ஜெட் மிகவும் அருமை. அதற்காக ஒரு பெரிய நன்றி.

பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல பதிவு.

Leave a response -

Your response:

Categories